அதிமுக மா.செ தலைமையில், மே தின கொண்டாட்டம்…
அதிமுக திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற, மே தின நிகழ்ச்சியில் அதிமுக கொடியினை ஏற்றி வைத்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
திருச்சி, EB ரோடு, கருவாட்டுப்பேட்டை அருகில், மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில், அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் துணை மேயர் சீனிவாசன், அதிமுக கொடியேற்றி, தொழிலாளர்கள், பொது மக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதில், அணிச் செயலாளர்கள் கார்த்திகேயன், முத்துக்குமார், இப்ராம்ஷா, பகுதிகழக செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ் குப்தா, ரோஜர், தகவல் தொழில்நுட்ப பிரிவு வெங்கட் பிரபு உள்ளிட்ட அதிமுகவினர் பலர் பங்கேற்றனர்.