நெல்லை ஆர்.ஆர்.இன் ஹோட்டல் நிர்வாகத்தின் 13ஆம் ஆண்டு விழா…
ஓம்சக்தி குழுமத்தின் கிளை திருநெல்வேலி ஆர்.ஆர்.இன். ஹோட்டல் நிர்வாகத்தின் 13ஆம், ஆண்டு விழா நெல்லை சந்திப்பில் உள்ள ஆர்.ஆர்.இன் ஹோட்டல் அரங்கத்தில் நடைபெற்றது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஓம்சக்தி சேர்மன் ராமச்சந்திரன் பிள்ளை கலந்து கொண்டு தொழிலாளர்கள் மத்தியில் பேசும்போது கடின உழைப்பு, நேர்மை, அர்ப்பணிப்பு தான் உயர்வுக்கு வழி தரும் என்று பே. பேசினார். மேலும்,சிறப்பாக பணியாற்றிய தொழிலாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்கள். நிகழ்ச்சியில் மேனஜிங் இயக்குனர் மணிகண்டன், முன்னாள் வருமான வரித்துறை முதன்மை அதிகாரியும், செயல் இயக்குநர் ராஜ்கோத்ரா, இயக்குனர்கள் செல்வி. ரிஷிகா, பொன்ராஜ், ரக்சணா, குடும்பத்தினர் மற்றும் திருநெல்வேலி கன்னியாகுமரி சென்னை தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை ஓம்சக்தி குழுமத்தின் ஊழியர்கள் செய்து இருந்தனர்.