நாங்குநேரியில் காவலரும் நடத்துனரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரம்: ஆரத்தழுவி சமரசம் ஆன வீடியோ வைரல்…
நெல்லையிலிருந்து தூத்துக்குடிக்கு அரசு பேருந்தில் சீருடையுடன் காவலர் ஆறுமுகபாண்டி பயணம் செய்தார். பணி நிமித்தமாக செல்வதால் பஸ்டிக்கெட் எடுக்க முடியாது என அவர் தெரிவிக்க வாரன்ட் இருந்தால்தான் கட்டணமில்லாமல் பயணிக்க முடியும் என நடத்துனர் தெரிவிக்க இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.
பின்னர் ஆறுமுகபாண்டி கட்டணம் செலுத்தி பயணித்தார். இது குறித்த வீடியோ சர்ச்சைக்குள்ளானது. இது குறித்த செய்தி தினமும் நாளிதழ்களிலும்,தொலைகாட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியது.
பிரச்னைக்கு முடிவு காண உள்துறை செயலாளர் அமுதாவை, போக்குவரத்துத்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.இதில் பிரச்னைக்கு தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது.அதன்படி சம்பந்தப்பட்ட நடத்துனரும்,காவலரும் ஆரத்தழுவி சமதானம் ஆகினர்.
இரு துறைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் போக்கு முடிவுக்கு வந்தது. சம்பந்தப்பட்ட கண்டக்டரும், காவலரும் தேனீர் அருந்தியபடி ஆரத்தழுவி சமதானம் ஆகிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.