உலக செவிலியர் தினம்…திருச்சி அரசு மருத்துவமனை செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்பு…
மருத்துவத் துறையில் முன்னோடி செவிலியராக பணியாற்றியவர் பிளாரண்ஸ் நைட்டிங்கேல் அம்மையார்.அவரது நினைவாக உலகம் முழுவதும் சர்வதேச செவிலியர் தினம் ஆண்டுதோறும் மே 12ம்தேதி கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு நாளும் பெருகிவரும் கடுமையான நோய்களால் அனைத்து நாடுகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.இந்த சூழ்நிலையில் நோய்களை கட்டுப்படுத்திய மக்களை குணப்படுத்த வேண்டியது அவசியம்.இதற்கு செவிலியர்களின் பணி மிகவும் முக்கியமானது.
உலகசெவிலியர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவமனை கண்காணிப்பாளர் முன்னிலையில் செவிலியர்கள் தாங்கள் ஏற்றுக்கொண்ட செவிலியர் பணியினை சிறப்பாக செய்யவும் மெழுகுவர்த்தியை தங்கள் கைகளில் ஏந்தியபடியும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.இதில் ஏராளமான செவிலியர்கள் கலந்துக்கொண்டனர்.
தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வரும் செவிலியர்கள் மற்றும் செவிலியர் பணியை சிறப்பாக செய்ய பெரும் உதவிகரமாக இருக்கும் மருத்துவர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி ஆசிரியர்களுக்கும் கேடயங்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.