ஊட்டியில் திடீர் மழை, விவசாயிகள் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…
ஊட்டியை தாலாட்டிய மழையால் நீண்ட நாட்களுக்கு பிறகு குளிர்ந்த காலைநிலை…
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த பல நாட்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் நீர் நிலைகள் வரண்டுவிட்டன.
பல பகுதிகளில் குடிநீர் பஞ்சம் காணப்பட்டது. விவசாயபூமிகள் வானம் பார்த்த பூமிகளாய் மாறின லாரிகளில் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாச்சும் நிலை உருவானது.
இந்த நிலையில் ஊட்டி சுற்றுவட்டார பகுதி மற்றும் நீர் பிடிப்பு பகுதிளில் நேற்று மழை பெய்தது. ஆனால் ஊட்டிக்கு மழை இல்லை ஏமாற்றத்தில் இருந்த ஊட்டி மக்களுக்கு ஆறுதலாய் இன்று கருமேகங்கள் திரண்டு மழையாய் பொழிந்தது. பலத்த மழை எனகூற முடியாவிட்டாலும் மண்ணை நனைக்கும் வண்ணம் மழை பெய்யதால் விவசாயிகள் சிறிது நிம்மதி அடைந்தனர்.
வெயிலின் வாட்டம் போனதால் ஊட்டி மக்களும் இதமான காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இரண்டு மழையாவது மலைமகளுக்கு தேவை என்பதால் வானம் பார்க்கும் நிலையே ஊட்டியில் தொடர்கிறது.