திருச்சி ஏர்போர்டில் 235 கிராம் கடத்தல்…தங்கம் பறிமுதல்…
திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை வியட்நாம், தோஹா உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் சென்னை, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு உள்நாட்டு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஒரு பயணியின் 3 டிராலி பைகளின் கீழ் சக்கர திருகுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 235 கிராம் எடையும், ரூ. 16.17 லட்சம் மதிப்புள்ள 96 சிறிய அளவிலான 24k தங்கக் கம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.