News

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா: சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர்கள்…

திருச்சி தெற்கு மாவட்டத்தில்,கலைஞர் நூற்றாண்டு விழா 100 வது
நிகழ்ச்சியாக திருவெறும்பூர் தொகுதியில் கலைஞர் திருவுருவச் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா…

திருச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பில்
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட கழகத்தின் சார்பாக மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை, ஆகிய தொகுதிகளில் தொகுதிக்கு ஒரு இடத்தில் கலைஞர் திருவுருவ சிலை தலைமைக் கழகத்தின் அறிவுத்தலின்படி திருச்சி கிழக்கு மற்றும் மணப்பாறை ஆகிய தொகுதிகளில் சிலை நிறுவி திறப்பு விழா சிறப்பாக எடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நூற்றாண்டு விழாவின் நிறைவு நாளான இன்று திருவெறும்பூர் தொகுதியில் காட்டூர் ஆயில்மில் அருகில் கலைஞரின் திருவுருவச் சிலைக்கு அடிக்கல் நாட்டு விழா திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், மாநகர செயலாளர் மதிவாணன் முன்னிலையில்,கழக முதன்மைச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார் .

இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் சேகரன், வண்ணை அரங்கநாதன், கவிஞர் சல்மா, துணை மேயர் திவ்யா, பகுதி செயலாளர் நீலமேகம், மாமன்ற உறுப்பினர்கள் செந்தில், கார்த்திக், வட்ட செயலாளர் முருகானந்தம், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *