News

திருச்சி எஸ்.பி அலுவலகத்தில்: சவுக்கு சங்கர் மீது சூர்யா சிவா புகார்…

எடப்பாடி பழனிசாமியின் கைக்கூலி தான் சவுக்கு சங்கர் – திருச்சி சூர்யா சிவா அதிரடி
எடப்பாடி பழனிசாமி குறித்து பல ரகசியங்களை அறிந்து வைத்துள்ள சவுக்கு சங்கரின் உயிருக்கு சிறைச்சாலையில் அச்சுறுத்தல் இருப்பதாக சூர்யாசிவா குற்றம் சாட்டி உள்ளார்.

சமூக வலைதளமான யூடியூபில் முக்குலத்தோர் சமூகத்தினையும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையும் அவமதிக்கும் விதமாகவும், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எந்த வேலைக்கும் செல்லாமல் குடிபோதையில் இருப்பதாகவும், குற்ற பின்னணி உடையவர்களான அந்த சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை எந்த ஒரு நிறுவனமும் வேலைக்கு சேர்க்க மறுக்கிறது.

தேவர் ஜெயந்தியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சாதி கலவரத்தை தூண்டும் விதத்தில் இழிவான கருத்துக்களை பேசி சவுக்கு சங்கர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருந்தது முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறி சவுக்கு சங்கர் மீதும், சவுக்கு யூடியூப் சேனல் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி ஓபிசி அணி சார்பில், மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யாசிவா திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சூர்யாசிவா, பெண் காவலர்களையும், பெண்களையும் இழிவாக பேசியதற்காக தமிழகம் முழுவதும் இருந்து 35 புகார்கள் காவல்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. முக்குலத்தோர் சமூகத்தை பற்றி இழிவாக பேசியதற்காக கோவையில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்கள் புகழை பாதுகாப்பது ஓபிசி அணியின் கடமை என்பதால் சவுக்கு சங்கர் மீது தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் நேர்மையான அதிகாரி. ஆனால் சவுக்கு சங்கர் பல இடங்களில் பகையை சம்பாதித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமியின் கைக்கூலியாக செயல்பட்டு விமர்சனங்களை பெற்றுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி குறித்து எத்தனை வீடியோக்களை பதிவு செய்து வைத்துள்ளார் என்பது கூட தெரியாது.

கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி உடன் நீண்ட நாள் சவுக்கு சங்கர் பயணித்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கனகராஜ் மரணத்தில் காரை ஓட்டி வந்த மல்லிகா நல்லுசாமி சவுக்கு சங்கரின் நண்பர். இந்த வழக்கு விசாரணை தொடர்பாக பலவற்றை ஆப் செய்துள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமி உடன் நீண்ட நாள் பயணித்து இருப்பதால் எடப்பாடி பழனிச்சாமி குறித்த ரகசியங்கள் அறிந்திருப்பதால் சவுக்கு சங்கர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. அதே நேரம் சிறையில் கைதிகள் உயிரிழந்தது தொடர்பாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ டிவி சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது என்பது சவுக்கு சங்கர் உயிர் மீது அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறது. மேலும் தேவர் ஜெயந்தியின் போது ஆர்.பி.உதயகுமார் மற்றும் தனது எஜமான் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை இழிவு செய்த சமூகத்தை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காக சவுக்கு சங்கர் இவ்வாறு செயல்படுவதாகவும் சூர்யா சிவா குற்றம் சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *