News

கூடலூர் அருகே குடியிருப்பு பகுதிகளுக்குள் உலாவந்த: சிறுத்தை கூண்டில் சிக்கியது…

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தேவர்சோலை பகுதியில் மக்களை அச்சுறுத்திய சிறுத்தை வனத் துறை வைத்த கூண்டில் இன்று காலை சிக்கியது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தேவர்சோலை பகுதி தேவன் எஸ்டேட் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் கடந்த நான்கு நாள்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் பகல் நேரத்தில் தொடா்ந்து சிறுத்தை ஊருக்குள் நடமாடியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகாவில் உள்ள தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட ஒற்றுவயல் கிராமத்தில் ஊருக்குள் செவ்வாய்க்கிழமை நுழைந்த சிறுத்தை குடியிருப்பு பகுதியிலும் விவசாயத் தோட்டங்களிலும் நடமாடியது.சிறிது நேரம் கழித்து பாக்குத் தோப்புக்குள் சென்று படுத்து ஓய்வெடுத்தது.

இந்நிலையில், இரண்டாவது நாளாக புதன்கிழமையும் அதே சிறுத்தை தேவா்சோலை பகுதியில் உள்ள தேவன் எஸ்டேட் சாலையில் நடமாடியது. இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பாா்த்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

அதன் பிறகு இரண்டு தானியங்கி கேமராக்கள் மற்றும் இரண்டு கூண்டுகள் வனத்துறையினர் சார்பாக வைக்கப்பட்டன.

இந்த நிலையில் இன்று அதிகாலை அந்தப் பகுதியில் சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்ட நிலையில் அந்தப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் அங்கு சென்று பார்க்கும் போது சிறுத்தை ஒன்று சிக்கி இருந்தது தெரியவந்தது.

கூணடியில சிக்கிய சிறுத்தை மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது.
வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் ராஜேஷ் மற்றும் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு ஆகியோர் சிறுத்தையை ஆய்வு செய்தனர்.

சிறுத்தை காயம் அடைந்துள்ளது உறுதியாகி உள்ளதால் தற்போது அந்த சிறுத்தை முதுமலை தெப்பக்காடு கால்நடை மருந்தகத்திற்கு கொண்டு செல்ப்பட்டது.

அதன் காயத்தை ஆயவு செய்து அதன் அடிப்படையில் சிறுத்தையை வெளியில் விடுவதா அல்லது தொடர்ந்து சிகிச்சை அளிப்பதா என்பது பற்றி முடிவு செய்ய உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக சிறுத்தை பயத்தால் பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டதுடன் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும் பணிக்கு செல்லாமல் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று கூண்டுகள் வைக்கப்பட்ட நிலையில் ஒரே நாளில் இன்று காலை சிறுத்தை கூண்டில் சிக்கி உள்ளது
இது அந்த பகுதி மக்கள் மத்தியில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது பொதுமக்கள் அனைவரும் வனத்துறையினருக்கு தங்களின் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

இதையடுத்து, கடந்த புதன்கிழமை முதல் அந்தப் பகுதியில் தேடுதல் பணியை தொடங்கிய வனத்துறையினர், சிறுத்தை கிடைக்காத நிலையில் அந்தப் பகுதியில் கூண்டு வைத்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று சனிக்கிழமை காலை சிறுத்தை கூண்டில் சிக்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *