News

முகநூலில் பெண்கள் குறித்து அவதூறு… வாலிபர் கைது…

பேஸ்புக்கில் இஸ்லாமிய பெண்கள் குறித்து அவதூறு – மதுரை மாவட்ட இளைஞரை கைது செய்தது திருச்சி சைபர் கிரைம் போலீஸ்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம். சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ராஜசேகர் (32) என்பவர், இணைய மற்றும் சமூக வலைதள குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்த போது சமூகவலைதளமான முகநூலில் அந்த நபர் அவரது பக்கத்தில் பல பதிவுகளை ஏற்றியுள்ளார்.அவற்றை பார்த்த போது அதில் இரு வேறு மதத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் முத்தம் கொடுப்பது போன்ற போட்டோவை பதிவிட்டு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த பெண்களை பற்றி தவறுதலாக டைப் செய்து பதிவிடப்பட்டிருந்தது தெரிய வந்தது.அந்த நபர் இதுபோல பெண்களை கொச்சைப்படுத்துவது போன்ற படங்களை தொடர்ந்து பதிவேற்றியிருந்ததும் தெரியவந்தது. எனவே, சைபர்கிரைம் காவலர் ராஜசேகர் அளித்த புகாரின்பேரில், நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிந்து,பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்த மதுரை மாவட்டம், அப்பன்திருப்பதி, பெருமாள் கோயில் தெருவைச்சேர்ந்த அசோக்குமார் (27) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *