News

நாகர்கோவில்-சென்னை இடையே ஜூன் மாதத்தில் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு…

நாகர்கோவிலில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சி, விருத்தாசலம் வழியாக சென்னை எழும்பூருக்கு ஜூன் மாதத்தில் சிறப்பு ரயில்:

நாகர்கோவில் – சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களின் சேவை மே மாதத்துடன் நிறைவுபெறவுள்ளது. இந்நிலையில் இந்த சிறப்பு ரயில்களின் வழித்தடத்தை மாற்றியமைத்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.அதன் விவரம் பின்வருமாறு:

வண்டி எண் 06019 நாகர்கோவில் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், ஜூன் 2, 16 மற்றும் ஜூன் 30ம் தேதிகளில் இரவு 11.15க்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.15க்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

இதே போல் மற்றொரு சிறப்பு ரயில் ஆன வண்டி எண் 06021 ஜூன் 9 மற்றும் 23ம் தேதிகளில் இரவு 11.15க்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.15க்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

மறு மார்க்கத்தில் வண்டி எண் 06020 சென்னை எழும்பூர் – நாகர்கோவில் சிறப்பு ரயில், ஜூன் 3, 17 மற்றும் ஜூலை 1ம் தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.15க்கு நாகர்கோவில் சென்றடையும்.

இதே போல் மற்றொரு சிறப்பு ரயில் ஆன வண்டி எண் 06022 ஜூன் 10 மற்றும் 24ம் தேதிகளில் இரவு 11.15க்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.15க்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *