News

அய்யாக்கண்ணுவை உடனே விடுவிக்க கோரி விவசாயிகள் செல்போன் டவர் ஏறி போராட்டம்…

வாரணாசியில் போட்டியிடும் மோடியை எதிர்த்து போட்டியிடுவதற்காக 111 விவசாயிகள் திருச்சியில் இருந்து ரயில் மூலம் புறப்பட்டனர். ஆனால் அவர்களை செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் இறக்கி விட்டனர். எனவே அங்கிருந்து திரும்பி திருச்சிக்கு வந்தனர்.

மோடி நான் பிரதமர் ஆனால் விவசாயிகளுக்கு இரட்டிப்பான விலையை தருவேன் 18 ரூபாய் விற்ற நெல்லுக்கு 54 ரூபாய் தருவதாக கூறிவிட்டு தற்போது வெறும் 22ரூபாய் தருகிறார்.
2700 விற்ற கரும்புக்கு 8000 ரூபாய் தருவதாக கூறிவிட்டு 3150ரூபாய் தருகிறார். விவசாயத்துக்கு மாதம் 500ரூபாய் பென்ஷன் வழங்குகிறார்கள். ஆனால் 5000 தரவேண்டும் என்பதற்காக போராடச் சென்றால் தடுத்து நிறுத்துகிறார்கள். டெல்லிக்கு தான் அனுமதி இல்லை, வாரணாசிக்கு அனுமதி இல்லை இது குறித்து காவல்துறையினருக்கு கடிதம் எழுதினாலும் பதில் இல்லை.

இதனைக் கண்டித்து இன்று தேசிய தென்னிந்திய நதிகள்இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் காலை பல்லவன் ரயில் மூலம் சென்னைக்குச் சென்று மத்திய அரசு நிறுவனமான சாஸ்திரி பவன் முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது காவல்துறை தடுத்தால் தமிழ்நாடு தலைமைச் செயலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என அமைப்பின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று காலை விவசாயிகள் சென்னைக்கு புறப்படுவதற்கு முன்பாக திருச்சி காவல்துறையினர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில அலுவலகத்தில் இருந்து மாநில தலைவர் அய்யாகண்ணு மற்றும் சென்னை செல்ல இருந்த விவசாயிகளை
காவல்துறையின கைது செய்து உறையூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனை கண்டித்து விவசாயி திடீரென உறையூர் பகுதியில் உள்ள செல்போன் டவரில் ஏறி
விவசாயிகள் தமிழ்ச்செல்வன், தனபால் செந்தில்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களுடன் போலீசார் மற்றும் தீயணைப்புத் துணையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *