திருச்சியில் நடந்த தமாகா…டெல்டா மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…
அடுத்த சட்டமன்றத்தில் தவிர்க்க முடியாத கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் இருக்கும் – த.மா.க மாநில பொதுச் செயலாளர் சுரேஷ் மூப்பனார் திருச்சியில் பேட்டி:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் சுரேஷ்மூப்பனார் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளரும், முன்னால் சட்டமன்ற உறுப்பினருமான விடியல்சேகர், மாநகர மாவட்ட தலைவர்கள் இன்டர்நெட் ரவி, ரவீந்திரன், குணா உட்பட டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சுரேஷ்மூப்பனார்
பெருந்தலைவர் காமராஜர் 122வது பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி தமிழ் மாநில காங்கிரசின் சார்பில் திருச்சி உழவர் சந்தையில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த பிறந்தநாள் விழாவில் தேசிய ஜனநாயக கூட்டணி அங்கம் வகிக்கும் தமிழக கட்சித் தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 1/2 வருடம் இருக்கிறது. எனவே அதற்கான ஆயத்தங்களை தேர்தல் நேரத்தில் தலைவர் நடவடிக்கை எடுப்பார்.
அடுத்த சட்டமன்றத்தில் தவிர்க்க முடியாத கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் இருக்கும்.
நடிகர் விஜய் நல்ல தலைவர்கள் தேவை என கூட்டத்தில் பேசியுள்ளார் என்ற கேள்விக்கு?
ஜனநாயகத்தில் நல்ல தலைவர்கள் வரவேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்.
எங்கள் தலைவர் ஜி.கே.வாசன் நல்ல தலைவர் தூய்மையான,எளிமையான தலைவர் தான் மக்கள் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.