திருச்சிக்கு வரவுள்ள புதிய மால்! விரைவில் திறக்கப்படும்…
திருச்சியில் மாநகராட்சி சார்பில் புத்தூரில் புதிய மால் ஒன்று திறக்கப்பட இருக்கிறது.
திருச்சி மாவட்டம் தமிழகத்தின் மிகவும் முக்கியமாக ஏன் அதற்கு அடுத்த தலைநகரமாக வரக்கூடிய மாவட்டமாக தற்போது இருந்து வருகிறது.
இவ்வாறு இருக்க திருச்சி மாவட்டத்தில் ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு வகையான தொழில்கள் தொடர்ந்து காலடி எடுத்து வைத்து வருகின்றனர். இவ்வாறு இருக்க வளர்ந்து வரும் மாவட்டங்களின் பட்டியல் சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக மதுரை, திருச்சி போன்ற மாவட்டங்கள் உள்ளன.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பூங்காக்கள் பல வகையான இடங்கள் உள்ளன. மால் என்று பார்த்தால் FSM மால், ரிலையன்ஸ் மார்ட், டிரெண்ட்ஸ், ஜெனி பிளாசா போன்ற ஒரு சில இடங்கள் மட்டுமே உள்ளன.
இவ்வளவு ஏன் பிரபல நிறுவனமான டிமார்ட் திருச்சியில் இரண்டு இடங்களில் உள்ளது. அனைத்து வகையான பொருட்கள் அடங்கிய இந்த டி மார்ட்டில் மக்கள் அனைவரும் தினந்தோறும் குவிந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு இருக்க இதற்கு போட்டியாக திருச்சி மாவட்டத்தில் புதிய மால் ஒன்றை மாநகராட்சி சார்பில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படி திருச்சி மாநகராட்சி சார்பில் புத்தூர் பகுதியில் ஏசி வசதியுடன் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு புதிய மாலின் கட்டுமான பணியாளானது தொடங்கப்பட்டது. சுமார் 20 கோடி செலவில் இதர பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்து உள்ளன.
இந்த மாலில் கூடுதலாக பார்க்கிங் ஏரியாவும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாலானது வணிக வளாகம் ஆகவும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் வரவேற்பை பொறுத்து இந்த மாலில் அலுவலகங்கள் மற்றும் உணவகங்களும் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாலை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க தாமதமாகியது. இந்த மாலை அடைய வாகனங்கள் அனைத்தும் செல்வதற்கு வசதியாக சாலை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த மாலை ஜூலை மாதத்தில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மின்சாரம் வழங்கும் பணிகள் அனைத்தும் மீதம் இருப்பதால் இந்த மாலை திறக்க ஒரு மாதம் தாமதம் என மாநகராட்சி அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.