குன்னூர் அருகே தைல தொழிற்சாலையில்: திடீர் தீயால் பரபரப்பு…
நீலகிரி தைலம் என்றாலே சுற்றுலா பயணிகள் அதிகம் வாங்கி செல்வது வழக்கம்.அதனை தயாரிக்க குடிசை தொழிலாளாகவும், தொழிற்சாலையாகவும் ஏராளமானோர் தயாரித்து வருகின்றனர்.இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் ஹை பீல்டு பகுதியில் உள்ள யூகலிப்ட்டஸ் தைலம் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென தீப்பற்றியது.உடனே அங்கிருந்தவர்கள் குன்னூர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த குன்னூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இரவு நேரம் இதனால் தொழிலாளர்கள் அங்கு இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்கப்பட்டது. அங்கிருந்த தைலம் தயாரிக்க பயன்படும் பொருட்கள் தீயில் எரிந்து கருகியது. பல லட்சம் மதிப்பிலான பொருள் நஷ்டம்.தீ விபத்து தொடர்பாக அப்பர் குன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.