News

திருச்சி எம்.பியானார் துரை வைகோ…3.13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி…

அடுத்த 48மணி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.பொருத்திருந்து பார்போம்.கண்கலங்கிய துரைவைகோ ஆறுதல் சொன்ன அமைச்சர்…

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை டி.வி.எஸ்., டோல்கேட் பகுதியில் உள்ள ஜமால் முகமது கல்லுாரியில் நடைபெற்றது.

காலையில், ஓட்டு எண்ணும் பணியை பார்வையிட வந்த துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது

ஓட்டு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலையில் இருப்பது, மக்கள் என் மீதும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது.

தேர்தலில் போட்டியிடும் விருப்பம் எனக்கு இல்லை. தொண்டர்களுக்காகவே தேர்தலில் போட்டியிட்டேன். நான் முன்னிலையில் இருப்பது அவர்களுக்கும், கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான் வெற்றி பெற்று, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு தேவையானவற்றை செய்து தருவேன் என கூறினார்.

இதனை தொடர்ந்து
ஓட்டு எண்ணிக்கை முடிந்த நிலையில், மூன்றரை லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற துரைவைகோ, மாலையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…

3லட்சத்து 13 ஆயிரத்து இரண்டு ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுத் தந்த ஜனநாயகத்தின் இறுதி எஜமான்களான திருச்சி தொகுதி மக்களுக்கு மனமார்ந்த நன்றி.

மகளிர் உரிமைத் திட்டம், ஏழை எளிய மாணவ, மாணவியருக்கு கல்லுாரி படிப்புக்கு மாதம் 1000 ரூபாய், தமிழ்ப் புதல்வன் திட்டம், மகளிர்க்கு கட்டணமில்லா பஸ் பயணத்திட்டம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி போன்ற ஏழை, எளியோருக்கான திட்டங்களை தந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சிக்கு சான்று தான் இந்த வெற்றி.

மூத்த அமைச்சர்கள் நேரு, ரகுபதி, அமைச்சர்கள் மகேஷ், மெய்யநாதன் ஆகியோரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. இந்தியா கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ், விசிக உள்ளிட்ட அனைத்து இயக்கங்கள், கட்சிகள், எந்த பொறுப்பும் வகிக்காத, பிரதிபலன் பார்க்காத தொண்டர்களின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி.

எளியவனுக்கு அளித்த வாய்ப்பை பயன்படுத்தி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், மூத்த எம்.பி.,க்கள் வழிகாட்டுதல் படி, இந்த தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் என்னால் முடிந்தவரை, எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து நிறைவேற்ற தயாராக இருக்கிறேன்.

தந்தையிடம் போனில் பேசிய போது அப்பா வாழ்த்துங்கள் என்று கூறினேன்.
நான் தான் உனக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என கூறினார். நான் எனக்காக போட்டியிடவில்லை. உங்களுக்காக, கட்சிக்காக, கட்சித் தோழர்களுக்காக போட்டியிட்டேன். நீங்கள் கேட்ட வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளேன் என்று பேசிய போது, துரைவைகோ கண்கலங்கினார்.

பா.ஜ., கட்சியினரின் பொய் பிரச்சாரத்தாலும், மதவாத பிரச்சாரத்தாலும் சில இடங்களில் இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளனர். பா.ஜ.கட்சியினருக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சியினருக்குத் தான் கிடைத்துள்ளது. அடுத்த 48மணி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். பொறுத்திருந்து பார்போம். மாற்றம் வந்தால் ரொம்ப சந்தோஷப்படுவேன்.

எங்களை பொறுத்தவரை அமைச்சரவையில் சேரமாட்டோம். இதில் முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் முடிவு தான்.

பத்திரிகையாளர்களுக்கும், எதிர் அணி வேட்பாளர்களுக்கும் நன்றி.திருச்சி தொகுதிக்காக அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *