பாஜகவின் தோல்வி உறுதியாகி விட்டது… திருச்சியில் துரைவைகோ பேட்டி…
பாஜகவின் தோல்வி உறுதியாகி விட்டது தோல்விக்கான காரணத்தை தேடிக் கொண்டிருக்கின்றனர்-திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் துரைவைக்கோ திருச்சியில் பேட்டி…
திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலின் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.வாக்கு என்னும் மையத்திற்கு திருச்சி நாடாளுமன்ற மதிமுக வேட்பாளர் துரைவைகோ வாக்கு எண்ணும் மையத்துக்குச் சென்று சிசிடிவி செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு கேட்டு அறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…
வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைத்து சிசிடிவி கேமராக்களும் செயல்பட்டு வருகிறது எந்த குறையும் இல்லை.
பிரதமர் தொடர்ந்து பிரிவினை துண்டு விதமாக சாதி மதத்தைச் சொல்லி வாக்கு சேகரித்து வருகிறார். இந்திய நாட்டில் இதுபோல் எந்த பிரதமரும் கையாண்டதில்லை இது கண்டிக்கத்தக்க செயல்.
சாதியை வைத்து, மாதத்தை வைத்து பரப்பரை செய்யக்கூடாது என்று தேர்தல் நடத்தை விதிகள் இருக்கிறது. தேர்தல் ஆணையத்தில் அனைத்து கட்சிகளும் புகார் செய்துள்ளனர்.
தேர்தல் ஆணையம் இதுவரை அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுவில்லை.
பாரதிய ஜனதா கட்சிக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர் ஒருதலைப் பட்சமாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.
ஷாம்பிரட்வாடா காங்கிரஸ் இயக்கத்தில் வெளிநாட்டு துறை செயலாளராக இருந்தார்.
காங்கிரஸ் தலைமை அவரது கருத்து ஏற்கத்தக்கதல்ல என தெளிவாக சொல்லிவிட்டது.அவர் ராஜினாமா செய்து விட்டார்.
தென்னக ரயில்வேயில் உள்ளவர்கள் பெரும்பாலும் வடநாட்டவர்கள் பணிபுரிகின்றனர். தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
வருமானவரித்துறை திருச்சியில் உள்ள பொதுத்துறை நிறுவனமான பிஹெச்இஎல், துப்பாக்கி தொழிற்சாலையில் பாதிக்கு மேல் வடநாட்டினர் வேலை செய்கிறார்கள்.
தமிழகத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.
முதல் கட்ட தேர்தல் நடைபெறும் பொழுது இந்தியா கூட்டணிக்கு 40-க்கும் வெற்றி வாய்ப்பு இருந்தது இரண்டாவது, மூன்றாவது தேர்தல்களில் வெற்றி முடிவாகியுள்ளது அதில் வெளிப்பாடுதான் பிரதமர் ஜாதியாக வைத்து மதத்தை வைத்து பேசி வருகிறார்.
பிரதமர் வெற்றி பெற்ற ஆக வேண்டும் என்றும் காரணமாக ஜாதி, மதத்தை வைத்து பேசி வருகிறார்.
பாஜகவின் தோல்வி உறுதியாகி விட்டது தோல்விக்கான காரணத்தை தேடிக் கொண்டிருக்கின்றனர். அதனால்தான் இதுபோன்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
உடல் ஆரோக்கியம் இருந்தால் வயது அரசியலுக்கு காரணம் அல்ல.
30, 40 வயதுகளிலே அரசியல் செயல்படாமல் சிலர் உள்ளனர். வயது என்பது ஒரு எண் மட்டுமே.
இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் ராகுல் காந்தி கட்டாயமாக பிரதமராக வருவார் அதற்கான சமிக்க எல்லா இடத்திலும் தெரிகிறது.
கெஜ்ரிவால் விடுதலையான பின்பு பின்பு டெல்லியில் பெரிய வரவேற்பு கொடுத்துள்ளனர்.
சிறையில் இருந்து விடுதலையான பின்பு அவர் எழுச்சியை கொடுத்துள்ளார்.
சவுக்கு சங்கர் கைதை குறித்து கேட்டபோது…
அதற்கு கருத்துச் சொல்ல விரும்பவில்லை என தெரிவித்து கடந்து சென்றார்.
பேட்டின் போது மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.