முதுமலையில் தொடர் மழையால் குளம், குட்டைகளில் தண்ணீர்: வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரிப்பு…
முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் தண்ணீர்,தொடர்மழை வனப்பகுதி பசுமையாக மாறியதால் சாலை ஓரங்களில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரிப்பு…
கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான முதுமலை, மசினகுடி பந்தலூர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி கோடை வறட்சியின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் நீர்நிலைகள் வறண்டது.
தொடர்ந்து வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு பசும்புற்கள் கருகியது.இதனால் காட்டு யானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்பட வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டது.இதன் காரணமாக வனவிலங்குகள் அடிக்கடி வனப்பகுதியையொட்டி உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன.
தொழிலாளர்களின் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை, தென்னை, பாக்கு போன்றவற்றை சேதப்படுத்தின. இதைத் தவிர்க்க வனப்பகுதியில் உள்ள சிமெண்ட் தரை தொட்டியில் வனத்துறை சார்பில் டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு நிரப்பப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் முதுமலை,மசினகுடி.உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்தது.
இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவுகிறது.
மேலும் நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
கூடலூர், முதுமலை, மசினகுடி பகுதியில் வறட்சியின் பிடியில் இருந்த வனப்பகுதி பசுமை திரும்பி உள்ளது. இதேபோல் வனவிலங்குகளின் பசுந்தீவனத் தட்டுப்பாடு பிரச்சினைக்கும் தீர்வு ஏற்பட்டுள்ளது.மேலும் 688 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது.
இதனால் வன விலங்குகளின் தாகத்தை தணிக்கும் வகையில் நீர்நிலைகளில் இருப்பு உள்ளதாக வனத்துறையினர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் தண்ணீர்
தொடர்மழையால் வனப்பகுதி பசுமையாக மாறியது சாலை ஓரங்களில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளால் சுற்றுலா பயணிகள் மகிழச்சி தெரிவித்தனர்
குறிப்பாக கூட்டம் கூட்டமாக மான்கள் மேய்வதால் குழந்தைகள் பெருமகிழ்சி தெரிவித்தனர்.
லங்கூர் குரங்குகளும் சாலை ஓரங்களில் அதிக அளவில் காணப்படுகிறது.இதனால் முதுமலைக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.