கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: திருச்சியில் போராட்டம்…
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புக்கு காரணமான அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அகில இந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட குழுக்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவில் அருகில் இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வகுமார்,இந்திய தேசிய மாதர் சம்மேளனம் மாவட்ட தலைவர் பார்வதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. ஏஐடியூசி திருச்சி மாவட்ட பொதுச் செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில்
என்.எப்.ஐ.டபிள்யூ மாவட்ட செயலாளர் அஞ்சுகம் அகில இந்திய மாணவர் பெருமன்ற மாநில தலைவர் இப்ராஹிம், சிபிஐ மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் செல்வராஜ் ஜனசக்தி இதழின் ஆசிரியர் மூர்த்தி,ஏ.ஐ.எஸ்.எப் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் விஸ்வநாத் சிபிஐ மாவட்ட செயலாளர் சிவா, மாவட்ட துணை செயலாளர் செல்வகுமார் உட்பட100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.