நடிகர் அலெக்ஸ் நினைவு தினத்தை முன்னிட்டு சாலையோர மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் மாமனிதர் செவிலியர் கலைமாமணி டாக்டர்.அலெக்ஸ் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு தினம் முன்னிட்டு, திருச்சி முதலியார் சித்திரம் பகுதியில் அமைந்துள்ள நினைவிடத்தில் பன்முகக் கலைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மெழுகுவர்த்தி ஏத்தி, மாலை அணிவித்து, பூ தூவி, மௌன அஞ்சலி செலுத்தினார்கள், அதனைத் தொடர்ந்து திருச்சி ரயில்வே நிலையம் அருகில் உள்ள சாலையோர மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது,
இந்நிகழ்ச்சி பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் நிறுவனர் தலைவர் வேல்முருகன் தலைமையில், மாநில பொருளாளர் பாலமுருகன், மாநில மகளிர் அணி தலைவி பொன்முடி பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாமனிதர் அலெக்ஸ் அவர்களின் மருமகன், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நியமன செயற்குழு உறுப்பினர் அடைக்கலராஜா கலந்து கொண்டு சிறப்பித்தார், பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் திருச்சி மாவட்ட தலைவர் அன்வர் தீன், செயலாளர் ஐயப்பன் அவர்களின் ஏற்பாட்டில், துணைத் தலைவர் ஜஸ்டின், துணை செயலாளர் மோகன், அமைப்பாளர் சங்கர்,
துணை அமைப்பாளர் அழகர் தங்கவேல், மாநில மக்கள் தொடர்பாளர் மயில்வாகனன்,
துணை அமைப்புச் செயலாளர் அருளானந்தம், கொள்கை பரப்பு செயலாளர் வேலுச்சாமி, துணை கொள்கை பரப்பு செயலாளர் கணேசன், மக்கள் தொடர்பாளர் இக்பால், திருச்சி மாவட்ட மகளிர் அணி தலைவி LR.சுகந்தி, செயலாளர் செல்வம், கொள்கை பரப்பு செயலாளர் தெரசா, மாநில மகளிர் அணி அமைப்புச் செயலாளர் விமலா, ஆகிய பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.