ஊட்டி நாய்கள் கண்காட்சியில் 56வகையான 400க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்பு…பரிசுகள்…
உதகையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 56 வகைகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன.
உதகையில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.நடப்பு ஆண்டு கோடை விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. விழாவையொட்டி உதகை அரசு கலைக் கல்லூரியில் நாய்கள் கண்காட்சி நேற்றும் இன்றும் நடைபெற்றது.
இதில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 56 வகைகளில் 400-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. நாட்டு ரக நாய்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை ,கோம்பை உள்ளிட்ட பல்வேறு ரக நாய்களும் கண்காட்சியில் பங்கேற்றன. வெளிநாட்டு வகைகளான ஜெர்மன் செப்பர்டு, டாபர்மேன், சைபீரியன், அஸ்கி, பீகில் ,பெல்ஜியம் செப்பா்டு போன்ற நாய்களும் பங்கேற்றன.கண்காட்சியில் நாய்களின் அணிவகுப்பு, மோப்பத் திறமை அறிதல், சுயக் கட்டுப்பாடு உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
இதில் வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்ளுக்கு கேடயங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்த ஆண்டின் சிறந்த நாய் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.
நாய்கள் கண்காட்சியை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.