Newsவிளையாட்டு

தேசிய அளவிலான கூடோ போட்டிகள்: வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு…

ஹிமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கூடோ போட்டிகள் 24 பதக்கங்களை வென்று தமிழ்நாடு அணியினர் திருச்சி திரும்பினர்.ரயில் நிலையத்தில் வீரர் வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு…

தேசிய அளவிலான கூடோ சாம்பியன்ஷிப் போட்டிகள் இமாச்சல் பிரதேசத்தில் கடந்த மே மாதம் 25ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை கிரீன்ஹெல்ஸ் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது. இந்தியாவிலிருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 300க்கு மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

தமிழகத்திலிருந்து தமிழக கூடோ சங்கத் தலைவரும் பயிற்சியாளருமான கந்தமூர்த்தி தலைமையிலான 60வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

நடைபெற்ற போட்டியில் 16வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான போட்டியில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மாலினி தங்கப் பதக்கத்தை வென்றார்.

7வயது உட்பட்ட ஆண்கள் பிரிவில் நிதர்சனசாய்,
19வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் ரஞ்சனி,
21வயதுக்கு உட்பட்ட பிரிவில் காவியா ஆகியோர் வெண்கல பதக்கத்தை வென்றனர்.

21வயதுக்குட்பட்ட பிரிவில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இலக்கியா மற்றும் ஆண்கள் பிரிவில் ஜெகதீஷ் 19வயதுக்குட்பட்ட பிரிவில் வைஷாலி ஆகியோர் வெண்கல பதக்கத்தை வென்றனர்.

இதேபோல் 21வயதுக்குட்பட்ட பிரிவில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தருண், மற்றும் 16வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஓம்பிரகாஷ் ஆகியோர் வெண்கல பதக்கத்தை பெற்றனர்.

தமிழகத்தை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 24பதக்கங்களைப் வென்றனர்.

போட்டியில் வெற்றி பெற்ற வீரர்,வீராங்கனைகள் இன்று திருச்சி ரயில் நிலையம் வந்தடைந்தனர். அவர்களை கூடோ விளையாட்டு சங்கத்தின் தலைவர் தங்க.நீலகண்டன், தமிழ்நாடு கூடோ பயிற்சியாளர் கந்தமூர்த்தி மற்றும் பயிற்சியாளர்கள் ஷேக்அப்துல்லா, பிராங்கிளின் பென்னி,சுரேஷ்,சரவணன்,பிரேம்குமார், தீம்தேயு,நாகை மாவட்ட பயிற்சியாளர் காவியாசோழராஜன் மற்றும் பெற்றோர்கள் வரவேற்றனர்.

தேசிய அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் ஏசியன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு பெற்றுள்ளனர். போட்டிகள் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக பிரத்யோகமாக பயிற்சி வழங்க தேசிய கூடோ விளையாட்டுச் சங்கத்தில் தலைவர் மற்றும் செயலாளர்கள் வரவுள்ளனர் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *