தேர்தல் ஆணையம் பா.ஜ.க விற்கு ஆதரவாக செயல்படுகிறது… மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்…
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆறு கட்டங்களாக தேர்தல் முடிவடைந்த நிலையில் இறுதி கட்ட தேர்தல் வரும் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆறு கட்ட தேர்தல்களிலும் தேர்தல் ஆணையம் பா.ஜ.க விற்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் ஜாதி, மதங்களை வைத்து வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது பல்வேறு தரப்பினர் புகார் அளித்தும் பா.ஜ.க தலைவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை மாறாக பா.ஜ.க விற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.
வட இந்தியாவில் நடைபெற்ற தேர்தலில் இளைஞர் ஒருவர் ஏழுமுறை பாஜகவிற்கு வாக்களித்ததாக வீடியோ வெளியாகி உள்ளது. அது குறித்தும் எந்தவித நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் செலுத்தவில்லை. தேர்தல் வாக்கு சதவீதம் குறித்தான முழுமையான விவரங்களை சரிவர தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. இந்த நிலையில் இன்று இறுதி கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் முடிய உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் இரண்டு நாட்கள் தியானத்தில் ஈடுபட உள்ளார்.இதுவும் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது.தான் அதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் முறையிட்டால் தேர்தல் ஆணையம் அதற்கும் எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இவ்வாறாக தொடர்ந்து பாஜகவிற்கு தேர்தல் ஆணையம் ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டியும் வரும் ஜூன் 4 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தல் எண்ணிக்கையை நேர்மையுடன் நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதையடுத்து பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தேர்தல் ஆணையத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.