பிரபல இனிப்பு குடோனில் பணிபுரிந்த…பீகார் தொழிலாளி மர்ம சாவு போலீசார் விசாரணை…
பிரபல இனிப்பு குடோனில் பணியாற்றிய பீகார் மாநில தொழிலாளியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை…
நேற்று அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மர்மமான முறையில் ஆண் பிணம் ஒன்று இருப்பதாக பாலக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.
தகவல் அறிந்த பாலக்கரை காவல்துறையினர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில்…
திருச்சியில் நூற்றாண்டுக்கு மேலாக புகழ்பெற்ற பிரபல இனிப்பு கடையில் இனிப்பு வகைகள் தயாரிப்பதற்காக சங்கிலியாண்டபுரத்தில் குடோன் ஒன்று உள்ளது.
இங்கு திருச்சி மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஊழியர்களும் இங்கு பணிபுரிந்து வருகின்றனர்.இங்கு பணிபுரிந்து வருகின்றனர். இதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் ராய் மகன் தேவேந்திர ராய் (39) என்பவர் மாஸ்டராக கடந்த 15ஆண்டுகளாக தங்கி பணி புரிந்து வந்தார்.
இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்புமாத ஊதியம் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் மது அருந்தியுள்ளார். அதிக அளவில் மது அருந்தியதால் உடல் நல கோளாறு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.