திருச்சியில் சூறைக்காற்றுடன் பெய்த மழை: வீட்டின் மேல் மரம் சாய்ந்து பெண் பலத்த காயம்…
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மருதாண்டக்குறிச்சி காலனி பகுதியில் வசித்து வருபவர் கருப்பண்ணன் இவரது மனைவி மருதாம்பாள் இருவரும் கட்டிடக் கூலி வேலை செய்து வருகின்றனர் .இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு பெய்த சூறைக்காற்றுடன் கூடிய மழையில் அவர்களது வீட்டின் அருகில் உள்ள மாமரத்தின் கிளை வீட்டின் கூரை மற்றும் அங்கிருந்த மருதாம்பாள் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த மருதாம்பாள் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுவரை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை என குடும்பத்தினர் குற்றச்சாட்டுகின்றனர்.
சேதமடைந்த வீடு மற்றும் காயமடைந்தவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.