மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ அன்பில் பொய்யாமொழியின் 71 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா அனுசரிப்பு…
முன்னாள் மாநில இளைஞரணி துணைச்செயலாளரும்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் பொய்யாமொழியின்
71ஆம் ஆண்டு பிறந்த நாள் அனுசரிப்பு.
முன்னாள் கழக இளைஞர் அணி துணைச் செயலாளர்-முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யாமொழியின் 71 ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி இல்லத்தில் அன்பில் பொய்யாமொழியின் திருவருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி தலைமை செயற்குழு உறுப்பினர் வன்னைஅரங்கநாதன் மாவட்டதுணைச் செயலாளர் செங்குட்டுவன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.