News

பணம் கேட்டு மிரட்டல்… பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு…

திருச்சி கருமண்டபத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 45) பால் வியாபாரம் செய்து வருவதுடன் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக், அர்ஜுனன் என்ற இருவர் ராஜாவின் பெட்டி கடைக்கு வந்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
ஆனாலும் ராஜா பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் ராஜாவை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

காயமடைந்த ராஜா திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ராஜா கொடுத்த புகாரின் பேரில் கண்ட்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரிவாளால் வெட்டப்பட்ட ராஜா ரத்தம் சொட்ட சொட்ட சாலையில் நின்றிருந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *