முதல்வர் ஸ்டாலினின் பயணம் ரத்து!.. திருச்சி விபத்து காரணமா?…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகை ரத்து. தமிழக முதல்வர் குடும்பத்தினரை அழைத்து செல்ல வந்த வாகனம் விபத்தில் சிக்கியது தான் காரணமா?
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இல்ல திருமண விழாவிற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குடும்பத்துடன் கலந்து கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டது இதற்காக நேற்று திருச்சி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடையும் மாவட்ட ஆட்சியரால் விடுக்கப்பட்டது. இன்று மாலை ஐந்து முப்பது மணிக்கு தமிழக முதல்வர் திருச்சி விமான நிலையம் வருகிறார் அதன் பின்னர் சாலை மார்க்கமாக புதுக்கோட்டை செல்கிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக முதல்வரின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே தமிழக முதல்வர் குடும்பத்தினரை அழைத்து செல்வதற்காக பென்ஸ் கார் ஒன்று திருச்சி விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியது இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த வாகனத்தை கிரேன் மூலம் மீட்டு அப்புறப்படுத்தினர். இந்நிலையில் இந்த விபத்து காரணமாகத்தான் தமிழக முதல்வர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதா என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.