மூடுபனி சூழ்ந்த ஊட்டி…முகப்பு விளக்கு வெளிச்சத்தில் வாகன ஓட்டிகள்…
உதகையில் இன்று காலை மூடுபனி மற்றும் மழைத்துளிகளால் துவங்கியது.இதன் காரணமாக சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகள் பயன்படுத்தியபடி சென்றன.
கோடையின் உச்சமான அக்கினிநட்சத்திர காலத்தில் ஊட்டி நகர் முழுவதும் மூடுபனி போர்த்திய காட்சி சுற்றுலா பயணிகளுக்கு பரவசம் கலந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.
அனைத்து வயதினரையும் சமமாக வசீகரிக்கும் மலைவாசஸ்தலங்களின் முக்கிய பொக்கிஷம் ஊட்டி மலைதொடர்களின் நிலப்பரப்புகளின் பசுமையான அரவணைப்பிற்குள் அமைந்திருக்கும் இந்த இடங்கள், அமைதி, இயற்கை அழகு மற்றும் மறக்க முடியாத அனுபவங்கள் நிறைந்த பயணத்திற்கு உறுதியளிக்கின்றன.
சிலிர்ப்பான மலையேற்றங்களைத் தேடும் சாகசப் பயணியாக இருந்தாலும், அமைதியான ஏரிகளுக்காக ஏங்கும் இயற்கை ஆர்வலராக இருந்தாலும், உள்ளூர் வாழ்க்கையைப் பார்க்கும் கலாச்சார ஆர்வலராக இருந்தாலும் நீலகிரி மலைவாசஸ்தலங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்குகின்றன.
மூடுபனி மலைகள், அமைதியான ஏரிகள் மற்றும் பசுமையான காடுகள் நகர்ப்புற வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து ஒரு புத்துணர்ச்சியூட்டும் பயணத்தை நீலகிரி வழங்குகிறது.
வளைந்த பாதைகளில் நீங்கள் பயணிக்கும் போது, மூச்சடைக்கக்கூடிய காட்சிகள் மற்றும் உங்கள் உணர்வுகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் இதமான மிதமான காலநிலை உங்களை வரவேற்கும். மிருதுவான மலைக்காற்றில் சூழ்ந்திருக்கும் பனி படலங்கள் உங்களை பரவசத்தின் எல்லைக்கு அழைத்து செல்லும்.
ஊட்டியில் இன்று விடியல் காலை மூடுபனி மற்றும் மழைத்துளிகளுடன் துவங்கியது.
இதன் காரணமாக சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகள் பயன்படுத்தியபடி சென்றன.
கோடையின் உச்சமான அக்கினிநட்சத்திர காலத்தில் ஊட்டி நகர் முழுவதும் மூடுபனி போர்த்திய காட்சியும் வெப்பஉடைகளை அணிந்தபடி மக்கள் நடமாடுவதும் சுற்றுலா பயணிகளுக்கு பரவசமாக கலந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.