கலங்கலாக வந்த குடிநீர்: உடனடி நடவடிக்கை எடுத்த மேயர்…
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அன்பழகன் இன்று திடீர் ஆய்வுமேற்கொண்டார்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 2 மற்றும் 3 வார்டு எண் 16மற்றும் 17வடக்கு தாராநல்லூர் பகுதி,கலைஞர் நகர் பகுதி குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் மேயர் அன்பழகன் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுடன் நேரில் சென்று குடிநீரை ஆய்வு மேற்கொண்டார். அப்போது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் மேயர் அன்பழகன் உறுதியளித்தார்.
பின்னர் தாராநல்லூர் வசந்த நகர் பகுதியில் அங்கன்வாடி மையம் கட்டும் பணியையும், 20 வது வார்டு பூலோகநாதர் கோவில் தெரு பகுதியில் புதிதாக நியாய விலை கட்டுவதற்கான இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் நகரப் பொறியாளர் சிவபாதம் செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர் இளநிலை பொறியாளர்,மாமன்ற உறுப்பினர்கள் பிரபாகரன்,எல்ஐசி சங்கர்,சண்முகபிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.