இது எங்க ஏரியா என அட்ராசிட்டி: களத்தில் யானை கூட்டம்…
பசி மரக்கிளைகளை சாப்பிடும் வரைகாத்திருக்கவும் கண்டிசன் போட்ட யானைகள்.முதுமலை கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மவுண்டாடன் செட்டி மக்களுக்கு மறுகுடிஅமர்வு திட்டத்தில் இடம் ஒதுக்கப்பட்ட அய்யன்கொல்லி பகுதியில் பகலில் வலம் வந்த யானைகளால் பரபரப்பு
இரண்டு யானைகளும் அதே பகுதியில் முகாமிட்டு சுமார் அரைமணி நேரம் அங்கிருந்து மரக்கிளைகளை உண்டது.
இதனால் அந்தாவசிய தேவைகளுக்கு கூட அந்த பகுதி மக்கள் வேறு எங்கும் அதிகாலை நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை உருவானது.
இதனை அடுத்து அங்கு வந்த பொதுமக்கள் யானைகளை விரட்ட முயற்சி செய்தும் யானை செல்லாமல் அதே பகுதியில் இருந்த நிலையில் மக்கள் மிகவும் பாதிப்படைந்தனர்.
அதற்குப் பிறகு வனத்துறையினர் வந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டிய பின்னர் அரை மணி நேரத்துக்கு பிறகு அந்த யானைகள் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றன.
சாலைகளை மறித்து மரக்கிளைகளை உடைத்து உண்ட யானைகளின் வீடியோ காட்சிகளை பொதுமக்கள் பதிவு செய்தனர். இந்த வீடியோ தற்பொழுது வைரலாக தொடங்கியுள்ளது
முதுமலை கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மவுண்டாடன் செட்டி மக்களுக்கு இடம் ஒதுக்கப்பட்ட அய்யன்கொல்லி பகுதியில் பகலில் வலம் வந்த யானைகளால் பாதிக்கபடுவதாகவும்
அரசால் முதுமலை கிராம பகுதியில் உள்ள மக்களுக்காக வகுக்கப்பட்ட மறுகுடிஅமர்வு திட்டத்தில் எந்த பயனும் இல்லை எனவும் அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்