திருமாவளவன் வெற்றி: திருச்சியில் விசிகவினர் தலைவர்கள் சிலைக்கு மரியாதை…
திருமாவளவன் மீண்டும் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் திருச்சியில் கட்சியினர் அம்பேத்கர், பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினர்,இனிப்புகள் வழங்கினர்.
இந்தியாவின் 18வது நாடாளுமன்றத் தேர்தல் கடந்த மாதம் 19மாதம் தேதி நடைபெற்றது.
இதில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மீண்டும் போட்டியிட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கி இரவு முடிவற்றது. இதில் 5,00575 வாக்குகள் பெற்ற திருமாவளவன்
1.03 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவித்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கட்சியினர் வெடி வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மேற்கு மாநகர மாவட்டத்தின் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ் தலைமையில் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும்,மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன்,
மாநில நிர்வாகி அரசு, நிர்வாகிகள் காட்டூர் பெரோஸ்கான், அஷ்ரப்அலி,
பரஸ்கான், ரஹீம்,
அண்ணாதுரை, சிறுத்தை சதீஷ், ஜெயக்குமார், விடுதலை ரகு, செல்வம், சந்திரமோகன், முருகேசன், உசேன்அப்பாஸ், வேல்முருகன், மாரியப்பன், மங்களம் ரபீக், ஏர்போர்ட் சதீஷ்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.கடந்த 2019 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நீண்ட இழப்பறிக்கு பின்னர் (3,219)வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.