News

யூடியூபர் சவுக்கு சங்கர் வழக்கு நாளை ஒத்திவைப்பு…நீதிமன்றத்துக்கு வெளியே பெண்கள் விளக்குமாறு, செருப்பு வீச்சு பரபரப்பு…

திருச்சி நீதிமன்றத்தில் சவுக்குசங்கர் வழக்கறிஞர்கள் நீதிபதி முன் காரசார விவாதம் வழக்கு நாளை ஒத்திவைத்து.
நீதிமன்ற வாசலில் விளக்குமாறு,செருப்புடன் சவுக்குசங்கரை எதிர்த்து கோஷமிட்டு தாக்க முயன்ற பெண்களால் பரபரப்பு.

சவுக்கு சங்கர் மீது சமூக வலைத்தளத்தில் காவல்துறையில் பணியாற்ற பெண்களை பற்றி அவதூறாக நேர்காணல் கொடுத்தது தொடர்பாக கோவையில் வழக்கு தொடரப்பட்டு தேனியில் கைது செய்யப்பட்டார்.

அது தொடர்பாக நீதிமன்ற காவலில் உள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணை காவலுக்கு எடுத்து விசாரித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த ஒரு விவகாரம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் வழக்கு தொடர்வது தேவையில்லாத ஒன்று.
அதேபோன்று ஒரு வழக்குக்கு பல்வேறு இடங்களில் நீதிமன்றத்தில் ஆஜராகி காவல்துறை விசாரணைக்கு எடுக்கின்றனர்.

ஏற்கனவே நீதிமன்ற காவலில் இருக்கும் போது அவருடைய கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
மீண்டும், மீண்டும் காவல்துறை விசாரணைக்கு எடுக்கும் போது அவர் கை எலும்பு முறிவு ஏற்பட்டது போல் நாளை அவர் கால் எலும்பும் முறியும் சூழல் ஏற்படும்.ஒரு விவகாரத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் வழக்கு போடுவதை தவிர்க்க வேண்டும் என சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதம்….
அதே போன்று அரசு தரப்பில் காவல்துறை சார்பில் விசாரணைக்கு எடுத்தால் மட்டுமே அதன் அடிப்படையில் அவர் பேசினார். அவரிடம் என்ன முகாந்திரம் உள்ளது என்பது குறித்தான விவரங்கள் வெளியே கொண்டு வர முடியும் என வாதிட்டனர்.

மேலும் பெண் காவலர்கள் நேம் பேட்ச் இல்லாமல் அழைத்து வந்ததும் வேனில் அவரை அடித்ததாக சொல்லப்பட்ட புகாரில் அழைத்து வந்த காவலர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சவுக்கு சங்கர் வழக்கறிஞர் தரப்பில் வாதிடப்பட்டது.அப்போது திடீரென உள்ளே வந்த பெண் காவலர்கள் இப்ப கூட வேனில் வரும்போது உங்கள் அனைவரையும் மீடியாவில் கிழிக்கிறேன் என சவுக்கு சங்கர் மிரட்டியதாக குற்றம் சாட்டினார்.

மற்றொரு பெண் காவலர் தான் கல்யாணம் ஆகாத நபராக பணியில் இருக்கிறேன்.நான் அவருடன் வேனில் பயணிக்கும்போது எனது பெயர் மற்றும் எனது போன் நம்பர் கேட்டதாகவும் நான் வழங்கி இருந்தால் எனது பெயருக்கும் அவப்பெயர் ஏற்படுத்துவார் என குற்றம் சாட்டினர்..

இதனால் நீதிபதி முன்பு பரபரப்பான விவாதம் இரு தரப்பினரிடையே ஏற்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைத்து திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள கிளை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்பட்டு நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார்.இந்நிலையில் சவுக்குசங்கர் நீதிமன்றத்தை விட்டு காவல்துறையினர் அழைத்து வந்தபோது நீதிமன்ற வாசலில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் விளக்குமாறு மற்றும் செருப்புடன் சவுக்குசங்கர் எதிர்த்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *