போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி…திருச்சி ரயில்வே எஸ்.பி துவக்கி வைத்தார்…
தமிழக இருப்புப் பாதை காவல்துறை சார்பில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை இருப்பு பாதை காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். இப்பேரணியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
பேரணியில் சென்ற மாணவ மாணவிகள் போதை பொருட்களை பயன்படுத்தாதீர்கள், போதை பொருட்கள் உடலுக்கு தீங்கானது போதை பொருளுக்கு எதிராக செயலாற்றுவோம் என்ற பதாகைகளை ஏந்தி சென்றனர். இப்பேரணியானது திருச்சி ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு மத்திய பேருந்து நிலைய சாலை வரை சென்று மீண்டும் ரயில்வே நிலையம் வந்தடைந்தது.
காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கைப்பிரதிகளை வழங்கினர்.
தொடர்ந்து ரயில் நிலையம் உள்ளே சென்று ரயிலில் பயணம் செய்ய காத்திருந்த பயணிகளிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கைப்பிரதிகள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் டிஎஸ்பி செந்தில்குமார், ஆய்வாளர்கள், மோகனசுந்தரி, ஷீலா, ஜாக்லின் மற்றும் உதவி ஆய்வாளர் திருமலைராஜா ரயில்வே பாதுகாப்படை ஆய்வாளர் செபாஸ்டின்,மற்றும் தமிழக இருப்பு பாதை காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை சேர்ந்த காவல்துறையினர் திரளாக கலந்து கொண்டனர்.
இன்று காலை திருச்சி இருப்பப்பாதை காவல் மாவட்டத்துக்கு 24இருப்புப் பாதை மாவட்டங்களில்
விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.