கர்நாடக அரசை கண்டித்து:- திருச்சியில் ரயில் மறியல் செய்ய முயன்ற விவசாயிகள்…
கர்நாடகா அரசைக் கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் அயிலை சிவசூரியன் மற்றும் நடராஜன் ஆகியோர் தலைமையில் இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு சமூக இயக்கங்கள் ஆகியவை இணைந்து திருச்சி ரயில் நிலையத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கர்நாடகா அரசு உடனடியாக தமிழகத்துக்கு காவிரி ஒழுங்காற்று ஆணையம் வழங்கியுள்ள உத்தரவின்படி தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கு மேற்பட்டோர் கண்டன கோஷமிட்டு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு ரயில் நிலையத்தில் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் ரயில் நிலையம் முன்பு அமர்ந்து கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
இந்தப் போராட்டத்தில் மாநில துணைச் செயலாளர் இந்திரஜித், மாநிலத் துணைத் தலைவர் முகமதுஅலி, மாநகர மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், புறநகர் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட தலைவர் ரமேஷ், துணைத் தலைவர் துரை, நிர்வாகி சண்முகம், சமூக நீதிப் பேரவையின் நிர்வாகி ரவிக்குமார், சமூக ஜனநாயக கூட்டத்தின் நிர்வாகி சம்சுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.