News

கள்ளச்சாராய மரணத்தில் நீதி வேண்டும்: திருச்சி கலெக்டர் அலுவலகம் முற்றுகை…

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் போராட்டக்காரர்கள் காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளால் பரபரப்பு

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தினால் இதுவரை 50 க்கும் மேர் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் பலர் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதன் காரணமாக தமிழகம் முழுவதும் அதிமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில்
மாவட்ட செயலாளர் சேதுபதி தலைமையில் 20க்கும் மேற்பட்டவர்கள் தமிழக அரசை கண்டித்தும், கள்ளச்சாராயத்தினால் இறந்தவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களை பணியிட நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற பொது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர் இதனால் காவல்துறையினருக்கும் போராட்டாகாரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதனை தொடர்ந்து அவர்கள் உள்ளே சென்று மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *