News

கூடலூர் அருகே வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை: மயக்க ஊசி போட்டு பிடித்த வனத்துறை…

ஸ்ரீமதுரையில் வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தை
8மணி நேர போரட்டத்திற்கு பிறகு மயக்க ஊசி பிடிக்கப்பட்டது.முதுமலை வனப்பகுதியில் விடப்படுகிறது.

நீலகிரி மாவட்டம், கூடலூர், ஸ்ரீமதுரை அருகே உள்ள, செபாஸ்டின் வீட்டில் இன்று பகல் 12மணிக்கு சிறுத்தை நுழைந்தது.அப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த, இடும்பன் என்பவர், சத்தம் கேட்டு வீட்டின் கதவை திறந்துள்ளார். அப்போது வீட்டினுள் இருந்த, அவரை நோக்கி ஆக்ரோஷமாக ஓடி வந்தது. அதிர்ச்சியடைந்த இரும்பன் கதவை சாத்தி உயிர் தப்பினார்.

தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு கூடினர். வீட்டினுள் இருந்த சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்டு அச்சமடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, உதவி வன பாதுகாவலர் கருப்பையா, ஆர்.டி.ஓ., செந்தில்குமார், டி.எஸ்.பி., வசந்தகுமார் வன ஊழியர்கள், சிறுத்தை நிலை குறித்து நேரில் ஆய்வு செய்தனர்.வன ஊழியர்கள், சிறுத்தை வீட்டை விட்டு வெளியேறாத வகையில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.சிறுத்தை மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்டது

இதனால் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
இதற்கு முன் ஏற்பாடுகளை மேற்கொண்டதுடன், இது குறித்து, முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் இரவு சேமுண்டி பகுதிக்கு வந்து சிறுத்தையின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்தார்.பின்னர் இரவு 8:15 மணிக்கு சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.
தொடர்ந்து, மயக்கம் அடைந்த சிறுத்தையை கால்நடை டாக்டர் ஆய்வு செய்து அதனை கூண்டில் அடைத்தனர்.

பின்னர் சிறுத்தையை வனத்தில் விடுவதற்காக முதுமலை வனப்பகுதிக்கு வாகனத்தில் எடுத்துச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *