என்.ஐடி கல்லூரியின் 61வது நிறுவன தினவிழா…
திருச்சி என் ஐ டி கல்லூரியில் 61வது ஆண்டு நிறுவன தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருச்சி என்ஐடி இயக்குநர் (பொ) முனைவர். என். குமரேசன், டீன் (ஆசிரியர் நலன்) தலைமை வகித்தார்.
இந்திய தொழில் நுட்ப கழகத்தின் இயக்குனரும் பேராசிரியருமான கே. என். சத்யநாராயணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது
தற்போதைய சூழ்நிலையில் கடுமையான போட்டி இருந்த போதிலும் வேலை வாய்ப்பு விகிதங்களை தொடர்ந்து தக்கவைத்து கொண்டதற்கு திருச்சி என்ஐடி வாழ்த்துகளை தெரிவித்தார். விக்சித் பாரதத்தின் இலக்குகளை நடைமுறைப்படுத்த, உயர்கல்வி நிறுவனங்கள் உலகத்தரம் வாய்ந்த முயற்சிகளில் ஈடுபட வேண்டும் நிலையான வளர்ச்சிக்கும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் புதுமையான கண்டுபிடிப்புகள் மிக அவசியம் என வலியுறுத்தினார்.
மேலும் ஒரு வலுவான ஆராய்ச்சி சுற்றுச்சூழலை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், பல வேலைத் துறைகளில் மனிதர்களை மாற்றி கொண்டு வரும் சூழலில், கல்வியாளர்களின் புதுமையான கண்டுபிடிப்புகளின் மூலமே புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் மாணவர்கள் தங்களது மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்புகளை தேர்ந்தெடுக்கும் பொழுது மட்டுமின்றி மற்ற பொறியியல் துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்
என்றார்.
என்ஐடி மாணவர்களுக்கு, இளைய தலைமுறை மென்பொருள் மேம்பாட்டாளர், அலுவலக உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, என்ஐடி திருச்சிராப்பள்ளி மாணவர்களை மேம்படுத்தவும், தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும் மற்றும் வேலை தேடுபவர்களை விட வேலைகளை உருவாக்குபவர்களை வளர்க்கவும் ஒரு ” இன்னோவேஷன் மையம் நிறுவப்படும் என்றுகுமரேசன் கூறினார்
முன்னதாக முனைவர். எஸ். டி. ரமேஷ், டீன் (கல்வி) அவர்கள், நடப்பு கல்வியாண்டில் திருச்சி என்ஐடி குறிப்பிடத்தக்க சாதனைகளைக் கோடிட்டுக் காட்டும் விரிவான அறிக்கையை வழங்கினார். சிறப்பாகச் செயல்பட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்களுக்கு சாதனை விருதுகள் மற்றும், சிறப்பாகச் செயல்பட்ட துறைக்கு சாதனை விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. அது மட்டுமின்றி, 2024 ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த சிறந்த மாணவியாக செல்வி. எஸ். ஹர்ஷிதா ஆர்.இ.சி. / என்ஐடி இன் முன்னாள் மாணவர்கள் சங்கமான ரீகாலி ல் கௌரவிக்கப்பட்டார்.
மேலும் அவருக்கு ரீகால் மூலம் நிதியுதவியும் வழங்கப்பட்டது. இந்த விருதினை பெற்றுக்கொண்டதற்கு ஹர்ஷிதா அவர்கள், இயக்குனர், ஆசிரியர்கள் மற்றும் நீ காலுக்கு தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
இந்த விழாவில் முக்கிய பிரமுகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மற்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.