சமையல் கலையில் சாதித்த மகள்…ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி…
இசை தொழிலை விட்டு வேறு துறையில் சாதித்த மகள் ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சியான பதிவு…
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ், ஹிந்தி மற்றும் அங்கிலம் என பல மொழி படங்களுக்கு இசை அமைப்பவர். ஆஸ்கார் விருதினை பெற்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். மகன் அமீன் மற்றும் மகள் கதிஜா இருவரும் இசை துறையிலேயே நுழைந்து இருக்கிறார்கள்.
ரஹ்மானின் இன்னொரு மகள் ரஹீமா இசை துறையில் ஆர்வம் இல்லை. ஆனால் அவர் சமையல் துறையில் படித்து பட்டம் பெற்று இருக்கிறார்.
மகள் செஃப் ஆகி உள்ளதை பற்றி ரஹ்மான் தற்போது நெகிழ்ச்சியாக பதிவு செய்து இருக்கிறார்.“My little girl @raheemarahman is a chef now #prouddad” என அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.