News

1-1/2ஆண்டுகளில் 10 கல்லீரல் மாற்று சிகிச்சை: திருச்சி அப்போலோ மருத்துவமனை சாதனை…

திருச்சி அப்போலோ மருத்துவமனையின் கல்லீரல் கணையம், பித்த நாளம் சிகிச்சை பிரிவு வெற்றிகரமான பயணம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு திருச்சி காஜாமலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

அப்போலோ மருத்துவமனை கூடுதல் துணைத் தலைவர் பிரிவு தலைவர் ஜெயராமன், கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் மாற்று சிகிச்சை நிபுணர் மருத்துவர் குமரகுருபரன் ஆகியோர் செய்தியாளர் அளித்த பேட்டியில்

இந்தியா போன்ற மனித வளம் மிக்க நாட்டில் 5ல் ஒருவருக்கு கல்லீரல் சம்பந்தமான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2015 ஆண்டில் கல்லீரல் சார்ந்த பிரச்சனைகளால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவின் பங்கு 18.3% தற்போது அதிகரித்திருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வெளிநாட்டு உணவு வகைகள் நுகர்வு அதிகரிப்பு அதிக கலோரி கொண்ட உணவுகள் உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை மற்றும் அதிகாரிகளும் மது அருந்துதல் இயல்பான பழக்கம் மாறிவிட்ட சூழல் ஆகியவற்றால் கல்லீரல் நோய் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கல்லீரல் நோய் பாதிப்புகளை தீவிர பாதிக்கப்பட்ட நாள்பட்ட பாதிப்பு என இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம் இதில் தீவிர கல்லீரல் பாதிப்புகள் திடீரென ஏற்படக்கூடியவை. தொற்று நச்சுப்பொருள் கலப்பு அதிக அளவு அதிகமான மது அருந்துவது உள்ளிட்ட காரணங்களால் கல்லீரல் செயல்பாட்டு திடீரென்று பாதிப்பு ஏற்படலாம். ரத்தத்தில் நச்சுப் பொருட்கள் அகற்றுவதில் கல்லீரலுக்கு சிரம் ஏற்படுவதால் இந்த அறிகுறிகள் தென்படுகிறது.

இதுவரை திருச்சி அப்போலோ மருத்துவமனையில் 2குழந்தைகள் உட்பட 10பேருக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டு அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர் என தெரிவித்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பில் கல்லீரல் மற்றும் சிகிச்சை தமிழ்நாட்டின் தலைவர் மருத்துவர் இளங்குமரன், இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணர் கல்லீரல் கணைய பித்த நாள நிபுணர் மருத்துவர் விஜய்கணேசன்,
மருத்துவமனை மருத்துவ நிர்வாக அதிகாரி சிவம் ஆகியோர் கலந்து கொண்டனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *