பலத்த சூறைக்காற்றால்: பழமையான மரம் சாய்ந்து விபத்து… மின்சாரம் துண்டிப்பு…
நேற்று பலத்த சூறைக்காற்றுடன் இரவு பெய்த மழையால் ஸ்ரீரங்கம் கோவில் ராஜகோபுரம் அருகே உள்ள திருவள்ளுவர் வீதியில் 50 வருட பழமையான வேப்பமரம் அருகே உள்ள வீடுகள் மீது வேருடன் சாய்ந்து விழுந்த விபத்தால் சுமார்12 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிப்பு. உடனடியாக மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் இயந்திரங்கள் மூலம் மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.