மேட்டூர் அணை ஜூன்-12ல் திறக்க கோரி… விவசாயிகள் பேரணி…
விவசாயிகள் சங்க தலைவர்கள் பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணு தலைமையில் கல்லணையில் இருந்து விவசாயிகள் நீதி கேட்டு பேரணி…
ஜூன் 12-ல் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வேண்டும், கர்நாடகா அரசிடம் இருந்து உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உரிய தண்ணீரை பெற்று தர வேண்டும், மேகத்தாதுவில் அணை கட்டுவதை சட்டப்படி தடுத்து நிறுத்த வேண்டும், ராசி மணல் அணை கட்டுமான பணியினை துவங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் நீதி கேட்டு பேரணி பூம்புகாரில் துவங்கி, ஜூன் 12ல் மேட்டூர் அணையினை சென்றடைய உள்ளனர். இன்று இரண்டாம் நாளாக காலை கல்லணையில் துவங்கி, மதியம் 12 மணிக்கு திருச்சி காவிரி பாலம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு முன்னிலையில் விவசாயிகள் அங்கிருந்து சிந்தாமணி அண்ணாசிலை, மெயின்காட்கேட், கரூர் பைபாஸ் சாலை வழியாக பேரணியாக சென்று கலைஞர் அறிவாலயம் அருகே கூட்டம் நடத்த உள்ளனர்.