திருச்சி ஏர்போர்டில் நூதன முறையில்:- கடத்தி வந்த தங்கம் பிடிபட்டது…
திருச்சி விமான நிலையத்தில் 1.16 கோடி மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல்:
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து வந்த ஸ்கூல் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த ஆண் பயணி ஒருவரிடம் இருந்து, மூட்டுக்கு போடும் நீ கேப்ஸ் வடிவில் மாற்றி கடத்தி வந்த ஒரு கோடியே 16 லட்சம் மதிப்புள்ள, ஒரு கிலோ 65 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கத்தை, திருச்சி வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.