திருச்சி விமான நிலையத்தில்… ரூ 92லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்…
சார்ஜாவில் இருந்து இன்று திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை வான் நுண்ணறிவுப்பிரிவு சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் ஒரு பயணியை நிறுத்தி அவரிடம் சோதனையிட்டனர்.
அப்போது அவர் கொண்டு வந்திருந்த டைல்ஸ் கட்டிங் மிஷினுக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த 1,299.7கிராம் எடையுள்ள தங்கத்தை கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ரூ.92 லட்சம். அந்த தங்கம் கட்டிங் மிஷினின் ஆழமான பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.