News

ஊட்டியில் காட்டெருமை மர்மமான முறையில் இறப்பு… வன ஆர்வலர்கள் குற்றச்சாட்டு…

ஊட்டியில் மர்மமான முறையில் காட்டெருமை இறப்பு சம்பவ இடத்திற்கு வனத்துறை வரவில்லை என வன ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் 60 சதவீதத்திற்கு மேற்பட்ட பகுதிகள் காடுகளாக உள்ளன. கடந்த 1986 வனச் சட்டத்திற்கு பின், காடுகளை அழிப்பது மற்றும் வன விலங்குகளை வேட்டையாடுவது முற்றிலும் குறைக்கப்பட்டது.

அதன்பின், வனங்களின் பரப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வனச்சட்டம் கடுமையாக்கப்பட்ட பின், வேட்டைக்கு செல்பவர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் எரிபொருள் தேவைக்காககூட காட்டிற்குள் செல்வதை தவிர்த்துவிட்டனர்.

இதனால், நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் காட்டு யானைகள், கரடி, சிறுத்தை, புலி, காட்டு மாடுகள், பன்றிகள் உட்பட அனைத்து வன விலங்குகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துவிட்டன.

பெரும்பாலான காடுகளில் தற்போது வறட்சி காரணமாக போதிய உணவு மற்றும் நீர் கிடைப்பதில்லை. இதனால் வன விலங்குகள் மக்கள் வாழும் பகுதிகளில் வனவிலஙகுகளில் நடமாட்டம் சர்வசாதாரனமாகி விட்டது

அதிலும் காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் அவைகள் குடியிருப்பு பகுதிகளில் உணவுதேவைக்காக வருவது அதிகரித்து உள்ளது

இந்த நிலையில் ஊட்டி புதுமந்து பகுதியில் சாலையில் இன்று காலை காட்டெருமை ஒன்று மர்மமான நிலையில் இறந்து கிடந்தது

இது குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தும் இதுவரை வனத்துறையினர் அப்பகுதிக்கு வரவில்லை நீலகிரியில் பல பகுதிகளில் காட்டெருமை மர்மமான நிலையில் இறப்பது அதிகித்து வருவது வன ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *