News

சேலத்தில் சர்ச்சைக்கு உள்ளான முருகன் சிலையை…புனரமைக்க கோவில் நிர்வாகம் முடிவு…

இந்த முருகன் சிலையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
முருகன் சிலையில் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சனம் செய்தனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே ராஜ முருகன் கோவிலில் 56 அடி ராஜ முருகன் சிலை அமைக்கப்பட்டது. இந்த முருகன் சிலையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

முருகன் சிலையில் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சனம் செய்தனர்.

இது குறித்து சிலை வடிவமைத்தவரிடம் கேட்டதற்கு “இதுவரை முருகன் சிலை எங்கும் வடிவமைத்தது கிடையாது. எனக்குத் தெரிந்தது எல்லாம் முனீஸ்வரன் சிலை மட்டுமே. அதைத்தான் இதுவரை வடிவமைத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில், பக்தர்களின் கோரிக்கைக்கிணங்க முருகன் சிலையை புனரமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கோவிலின் நிறுவன தலைவர் வெங்கடாஜலம் தெரிவித்துள்ளார்.

இந்த முருகன் சிலைக்கு இதுவரை 40 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *