News

சவுக்கு சங்கருக்கு 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் திருச்சி கோர்ட் உத்தரவு…திருச்சி,சென்னை சிறை வேண்டும் சவுக்கு கோரிக்கை…

முசிறி டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகார் சவுக்கு சங்கருக்கு 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்.திருச்சி மகிலா குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவு…

மனரீதியாக, உளவியல் ரீதியாக கோவை சிறையில் பாதிக்கப்பட்டுள்ளேன் – நீதிபதி முன்பு சவுக்கு சங்கர் முறையீடு…

இன்று போலீஸ்காவல் முடிந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்த பின் மீண்டும் இன்று மாலை 4மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீசார் அஜர்படுத்தினர்.
நீதிபதி ஜெயபிரதா முன்பு ஆஜரான சவுக்கு சங்கரிடம்.

விசாரணை முறையாக நடத்தப்பட்டதா? உங்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கப்பட்டதா?என கேட்டார்?

அதற்கு அனைத்தும் வழங்கப்பட்டது. விசாரணையில் துன்புறுத்தப்படவில்லை.என்றார்.

மேலும் கோவை சிறையில் தனக்கு உளவியல் ரீதியாக பிரச்சனை ஏற்படுவதால் மிகுந்த மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது. எனக்கு மருத்துவ உதவியும் தனி வார்டு, சென்னை அல்லது திருச்சியில் வழங்க வேண்டும் கோரிக்கை வைத்தார்.

அதனை நீதிபதி மனுவாக வழங்குங்கள் பரிந்துரை செய்கிறேன் என தெரிவித்தார்.
தொடர்ந்து ஏற்கனவே கோவை நீதிமன்ற உத்தரப்படி 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் உள்ளதால் கோவை சிறைக்கு காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் முல்லைசுரேஷ்…

நேற்று மாலை 4மணி அளவில் ஏ.டி.எஸ்.பி கோடிலிங்கம் கஸ்டடிக்கு எடுத்துச் சென்று ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
3முறை நீதிமன்ற உத்திரப்படி வழக்கறிஞர்கள் நேரில் சென்று சந்திக்கலாம் என்ற உத்தரவுப்படி சவுக்கு சங்கரிடம் விபரங்களை கேட்டு அறிந்தோம், எனக்கு எந்த பிரச்சினை இல்லை என்று அவரை எங்களிடம் தெரிவித்தார்.

இன்று 4மணிக்கு மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி மனரீதியாக உடல் ரீதியாகவோ துன்புறுத்தபட்டதா? என சவுக்கு சங்கரிடம் கேட்டார்.

எந்த துன்புறுத்தலும் இல்லை என்று தெரிவித்தார்.

கோவை சிறையில் மனநலம் பாதிக்கப்பட்ட பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளதாகவும்,
அந்த பிளாக்கில்இருந்து வேற பிளாக்கிற்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து அவரது கோரிக்கையை நீதிபதி ஏற்று கோவை சிறை கண்காணிப்பாளருக்கு எழுத்துப்பூர்வமாக பரிந்துரை செய்துள்ளார்.

திருச்சியில் அவர் மீது உள்ள வழக்கு சம்பந்தமாக அவருக்கு ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளோம்.அவர் வேறு சிறைக்கு மாற்ற வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உத்தரகிடைத்துள்ளது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *