News

கருப்பு திராட்சையில் பிரமாண்ட 1.75டன் கிங்காங்: குன்னூர் பழகண்காட்சியில் தோட்ட கலைத்துறை அசத்தல்…

குன்னூர் பழகண்காட்சியில் 5.50டன் பழங்களில் பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை அபாரம்

தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறையின் சார்பில், நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64 வது பழக்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கவுசிக் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிபிலா மேரி ,தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் விஜயலட்சுமி,அனிதா மற்றும் பூங்கா மேலாளர் லட்சுமணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

பழகண்காட்சியில் சிறப்பு அம்சமாக1.75 டன் கருப்பு திராட்சையில் 6 அடி அகலம் 15 அடிஉயர பிரமாண்ட கிங்காங் அமைக்க பட்டுஉள்ளது இதை சுற்றுலாபயணிகள் வியந்து ரசித்து புகைபடங்கள் எடுத்து மகிழ்ந்தனர்

5.50 டன் பழங்களில் பல்வேறு சிறப்பு அலங்காரங்களை தோட்டக்கலை மலைப்பயிர்கள் சிறப்பாக அமைந்திருந்தது.150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிம்ஸ் பூங்காவில் இன்று
மே24 முதல் 25,26 ஆகிய மூன்று நாட்கள் பழக்கண்காட்சியும் நடைபெற உள்ளது.

பல்வேறு விதமான பழங்களைக் கொண்டு கார்ட்டூன் வடிவங்களில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்தில் பழக்கண்காட்சி அமைக்கப்பட உள்ளது.அது மட்டுமல்லாமல், மற்ற மாவட்டங்களில் இருந்து அரிய வகை பழங்கள் தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை சார்பில் காட்சி படுத்தபட்டு உள்ளது

இயற்கை விவசாயத்தை போற்றும் விதமாக இயற்கையை காப்போம் என்ற அலங்காரம் சிறுவர்களை கவர நத்தை டம்பெல்டெக்,மினியன்,டைனோசர் என பல்வேறு உருவங்கள் சிறப்பாக அமைக்கபட்டு இருந்தன

சிம்ஸ் பூங்காவின் 150வது ஆண்டை குறிக்கும் வகையில் பழவகைகள் காட்சி படுத்தபட்டு இருந்தன.

பூங்காவில் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு, தற்போது பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான குடிநீர் வசதி, வாகன நிறுத்துமிடம், பூங்காவில் அமரும் நாற்காலிகள் போன்றவையும் புது பொலிவுப்படுத்தப்பட்டு உள்ளன.

கடந்தாண்டை விட இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சிக்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 100 ரூபாயும், சிறியவர்களுக்கு 50 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

பழக்கண்காட்சிக்கான ஏற்பாடுகளை தோட்டக்கலை துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி,தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் விஜயலட்சுமி மற்றும் பூங்கா மேலாளர் லட்சுமணன் உள்ளிட்டோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *