News

திருச்சியில் வருவாய் நீதிபதி அலுவலகத்தை: முற்றுகையிட்ட விவசாயிகள்…

கோயில் நிலங்களில் நெல்லு மட்டுமே சாகுபடி செய்ய வேண்டும் என கூறும் வருவாய் நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் திருச்சி பழைய கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள வருவாய் நீதிமன்ற அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தமிழகம் முழுவதும் கோயிலுக்கு சொந்தமாக பல லட்சம் நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களை விவசாயிகளுக்கு குத்தகைக்கு வழங்கப்படுகிறது இந்த நிலங்களை குத்தகைக்கு எடுக்கும் விவசாயிகள் நெல் பயிரிட்டு வருகின்றனர். தமிழக அரசின் விவசாயத்துறை நிலங்களில் மாற்றுப் பயிர் விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது. இதன் அடிப்படையில் கோயில் நிலங்களை குத்தகைக்கு எடுத்த விவசாயம் செய்யும் விவசாயிகள் மாற்று பயிர் செய்ய முற்படும் போது 13மாவட்டங்களுக்கு வருவாய் நீதிபதியாக செயல்படும் செல்வராஜ் என்பவர் கோவில் நிலங்களில் நெற்பயிருக்கு அடுத்தபடியாக மாற்று விவசாயம் மாற்று பயிர் செய்யக்கூடாது என தடுத்ததுடன் அப்படி மாற்று பயிரிடும் பட்சத்தில் குத்தகைகள் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

இதனை கண்டித்து இன்று காலை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் செயல்பட்டு வரும் வருவாய் நீதிபதி அலுவலகத்தை 150க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு நீதிபதி இல்லாததால் தொடர்ந்து அங்கு இருந்து பேரணியாக திருச்சி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் சென்று அங்கு ஆட்சியரிடம் மனு வழங்கினர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அய்யாகண்ணு

தமிழக அரசு சொந்தமான கோவில் நிலங்களில் விவசாயிகளுக்கு குத்தகை எடுத்து நெல் பயிட்டு வந்தனர். தற்போது மாற்று பயிரான கரும்பு, வாழை, வெற்றிலை அரசு வலியுறுத்தும் நிலையில் வருவாய் நீதிபதி செல்வராஜ் மாற்று பயிர் செய்தால் குத்தகை ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

மாற்று பயிர் செய்தால் நிலம் கெட்டுப் போய்விடும் என கூறுகிறார்.
லஞ்சம் பெற்றுக்கொண்டு விவசாயி எதிராக செயல்படுகிறார்.இதனை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதுகுறித்து சென்னையில் உள்ள கமிஷனர் ஆப் லேண்ட் ரிவார்ம் முன்பு போராட்டம் நடத்த உள்ளோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *