உலக பட்டினி தினம்: பொது மக்களுக்கு பிரியாணி வழங்கிய த.வெ.க நிர்வாகிகள்…
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவக்கிய நடிகர் விஜய், தனது அரசியல் பயணத்தை தீவிரபடுத்தி வருகிறார்.பல்வேறு நலத்திட்டங்களை வழங்க அறிவுறுத்தி வரும் நிலையில் இன்று உலக பட்டினி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் ஒருவேளை மதிய உணவு வழங்க வேண்டி தனது ரசிகர்களுக்கு அன்பு கட்டளை இட்டிருந்தார்.
அதன்படி உலக பட்டினி தினத்தை ஒட்டி ஒரு வேளை உணவு சேவை என்ற திட்டத்தில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தினர், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
அதே போல திருச்சி அரசு மருத்துவமனை முன்பு தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கார்த்தி ஏற்பாட்டில் மதிய உணவாக சிக்கன் பிரியாணி, ஸ்வீட், முட்டை மாசல் ஆகியவை பரிமாறப்பட்டன இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெற்றனர்
இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் A.S.ராஜா,R.K.ரிஷி, செங்குளத்தான்,மெடிக்கல் சதீஷ், ஆரோக்கியசாமி, கல்பனா, ராஜேஷ், கணேஷ்,E.B.ரோடு கார்த்திக்,பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.